இலக்யா

குறுக்கெழுத்து 29 – சினிமா பாடல்கள்

By Vijay Shankar
12345678910111213141516171819202122232425
Squares filled: 0/108
Exolve Print Notes Jotter Ⓒ 2020 Copyright Holder(s) (delete or replace)

Across
1என் உள்ளம் மயங்கும்படி இந்த ஓவியம் என்னென்னவோ சொல்லுதடி! (5,4)
4& மேலிருந்து கீழ் 6. கேரள எல்லையில் நுழைந்த தமிழ்க் குருவிக்கு ஒரே கொண்டாட்டந்தான் (4. 5)
9& மேலிருந்து கீழ் 21. இந்த இளம் பருவத்தில் ஏதோ ஒரு காட்சி தோன்றுதடி (6, 4)
10& மேலிருந்து கீழ் 17. விசில் அடிக்க வருவாயா பாட்டி? (3, 2)
12அழகிய வேலனே, உன் ஒப்பனை… ம்… போய்விட்டது (4)
142000 ரூபாய் தாளில் பாதி அளவிற்கு பா.ஜ.க.வின் சின்னம் (4, 3)
15மேலிருந்து கீழ் 19-ஐ பார்க்கவும்
16 & 2316 & 23கீழடி நாகரிகத் தொட்டிலில் தர்மத்தின் தலைவன் (5, 4)
17நண்பா! நண்பா! என்று அழைத்தால் ஒருமுறை மட்டும் தோள் கொடுக்க வருகிறான் (2)
20 & 2520 & 25விழியே! கண்ணதாசனின் கடைசி வரியே! (3, 2, 2)
22பேரின்பம் தரும் பழந்தமிழ் இசைக்கருவியை வாசிக்கிறாள் மகள் (4, 2)
23இடமிருந்து வலம் 16-ஐ பார்க்கவும்
24& மே. கீ. 2. காதலனே/காதலியே, நலமா? (3, 3)
25இடமிருந்து வலம் 20-ஐ பார்க்கவும்

Down
1ரோஜாவுக்குத்தான் எத்தனை எத்தனை விருப்பங்கள்! (3, 3, 2)
2இ.வ.24-ஐ பார்க்கவும்
3ஹாங்காங் லேடி டிகிரி படித்த குழப்பத்தில் ஹாஸ்யம் மறந்துபோய் ஆடிப் பாடுகிறாள் (4, 4)
5 & 1305 & 13ரோஜா பூத்திருக்கும் விலாசம் மோகனுக்குத் தெரிய வேண்டுமாம் (2, 4)
6இடமிருந்து வலம் 4-ஐ பார்க்கவும்
7குற்றமற்ற ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சமான மெய்யன்பே! (3)
8செம்மலரே! உன்னைக் காண எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும் என்பது கங்கை அமரனுக்குத்தான் தெரியும் (7)
11பெண்களை உவமைகளால் வர்ணித்து வர்ணித்துக் கவிச்சக்கரவர்த்தியே சறுக்கிவிட்டான்! (4, 5)
13மேலிருந்து கீழ் 5-ஐ பார்க்கவும்
17இடமிருந்து வலம் 10-ஐ பார்க்கவும்
18அன்பானவனே! என் விழியை பம்பாயில் இழந்துவிட்டேன். (5)
19& இடமிருந்து வலம் 15. தாழம்பூ தலையில் சூடி நடப்பவளே! (4, 5)
21இடமிருந்து வலம் 9-ஐ பார்க்கவும்

Wednesday, February 27, 2008

தமிழருக்குப் பேரிழப்பு &


தமிழருக்குப் பேரிழப்பு - சுஜாதா மறைவு

ரங்கராஜன் என்கிற சுஜாதா நேற்று இயற்கை எய்தினார். தற்கால தமிழ் இலக்கியத்தில் தனி இடம் பெற்றவர். அறிவியலை அனைவருக்கும் அருமையாய் அள்ளித் தந்தவர்.


அடிப்படையில் ஒரு பொறியாளரான இவர், வாக்குப்பதிவு இயந்திர வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் பெரும் பங்கு வகித்தார்.


ஆனந்த விகடன், குமுதம், கல்கி போன்ற இதழ்களில் எழுதினார். இவரது மறைவு தமிழர்க்குப் பேரிழப்பு. இன்னொரு சுஜாதா வர இனி எத்தனை நாட்களாகுமோ?!

No comments: